தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் திருவேல்முருகன் முதலிடம் பெற்றார்.
தென்காசி மாவட்ட சிலம்பாட்டம் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் சாம்பியன்ஷிப் போட்டி இலஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் திருவேல்முருகன், சப்-ஜூனியர் பிரிவில் முதலிடம் பெற்றார். இம்மாணவருக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மாணவரை, போட்டி இயக்குநரும், சிலம்பம் தேசிய நடுவருமான சுந்தர், குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ், தென்காசி மாவட்ட சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளர் சேர்மபாண்டி, ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரெசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.