தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (8ம் தேதி) முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி சென்று பயில அனுமதிக்கப்பட்டனர்.
இதன்படி தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பெற்றோர் ஒப்புதல் கடிதம் கொண்டு வந்தனர். சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து, வகுப்புக்கு 25 மாணவ, மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு செய்ய ஆக்ஸ்போர்டு பள்ளிக்கு வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செண்பகா தலைமையில் மருத்துவ குழுவினர் வந்தனர். அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தனர்.
சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை டாக்டர் செண்பகா வழங்கினார்.
ஆய்வின் போது ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.திருமலை, தாளாளாரும், முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.