News

News

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

தென்காசி மாவட்ட மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் தாளாளர்கள்; சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் சார்பில் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்வி நிறுவனத்தில் வைத்து சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எவரெஸ்ட் கல்வி குழும தாளாளரும், சங்க தலைவருமான டாக்டர் முகைதீன் அப்துல் காதர் தலைமை வகித்தார். யுஎஸ்பி கல்வி குழும தாளாளர் சகாய செல்வமேரி வரவேற்று பேசினார்.

பழையகுற்றாலம் ஹில்டன் கல்வி குழும தாளாளரும் சங்க புரவலருமான ஆர்.ஜெ.வி.பெல் துவக்க உரையாற்றும் போது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் பற்றியும், அது சார்ந்த சட்டங்கள் பற்றியும் விளக்கியதோடு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து வாரந்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளக்க சிறப்பு வகுப்பு நடத்திட வேண்டும் என்றார்.

தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளரும் சங்க துணைத் தலைவருமான பாலமுருகன் பேசும்போது, பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்வி நலனுக்காக சங்க செயல்பாடுகள் இருப்பதை தொடர வேண்டும் என்றார்.

 குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும செயலாளர் டி.அன்பரசி திருமலை சங்க செயல்பாடுகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும், பொதுநலனோடு செயல்படுவதன் அவசியம் பற்றியும் விளக்கினார்.

சங்க சட்ட ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் முகமது பேசும்போது, சமூகத்தில் நலிவுற்ற மக்களுக்கு குறிப்பாக சட்ட விழிப்புணர்வு குறைவாக உள்ள கிராமப்புற மக்களுக்கு சாலைபாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்குவது குறித்தும் விளக்கம் அளித்தார்.

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமம் மற்றும் சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.திருமலை பேசும்போது, பள்ளிகள் செயல்பட தேவையான அரசு சான்றிதழ்களை பள்ளி நிர்வாகிகளுக்கு காலதாமதமின்றி கிடைத்திட சங்கம் உறுதுணையாக இருக்கும் என்றும், சாலை விதிமுறைகள் பின்பற்றப்படுவதன் அவசியம் பற்றியும், இதுகுறித்து மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் பற்றியும் கூறினார்.


வல்லம் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளரும் சங்க பொருளாளருமான காளியப்பன் பேசும்போது, அரசு துறை சார்ந்த பயிற்சி வகுப்புகளுக்கும், பள்ளி பெற்றோர்களுக்கும் இயன்ற அளவிற்கு சங்கம் உதவிட வேண்டும். கல்வி கட்டண சலுகை அனைத்து தாளாளர்களும் வழங்கி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகளை உயர்த்திட வேண்டும் என்றார்.

யுஎஸ்பி கல்வி குழும தலைவர் செல்வராஜ் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். கூட்டத்தில் பள்ளி தாளாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ கல்வி குழும தாளாளர் ராஜ்குமார் பேசும்போது, இன்றயை மாணவர்கள் பெற்றோரையும், வயதான முதியோர்களையும் மதிக்க வேண்டும். கைப்பேசி பயன்படுத்தும் நேரத்தை குறைக்க வேண்டும். வரலாற்று தலைவர்களின் நூல்களை அதிகம் வாசிக்க மாணவர்களை வலியுறுத்த வேண்டும் என்று கூறி நன்றி கூறினார்.

<< Go back to the previous page