தேசிய வில்வித்தைப் போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை சேப்பாக்கத்தில் இந்திய இளைஞர் விளையாட்டுகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர் ஒலிம்பியன் சங்கம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 12 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வேல்முருகன் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார்.
இவருக்கு ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க மாநில தலைவர் டி. எஸ். ஆர். சுபாஷ்; ஆகியோர் வெற்றி கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்..
இம்மாணவர் தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்ற மாணவர் வேல்முருகனை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே. திருமலை, கல்வி குழும செயலாளரும் பள்ளி முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.