மாவட்ட தடகளப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார்.
நெல்லை மாவட்ட தடகளச் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் சேரன்மகாதேவி கோப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது..
இப்போட்டியில் தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 16 வயது ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தென்காசி குத்துக்கல்வசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம். எஸ். பாரத் முதலிடம் பெற்றார். மேலும் இவர் 300 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார். இவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர் பாரத்தை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே. திருமலை, செயலாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையசிரியை க. சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன், பயிற்சி அளித்த பால்கன் அத்லட்டிக் பவுன்டேசன் செயலாளர் நிகிர் சிற்றரசு மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.