தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள, பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் பள்ளி சார்பில், செம்பியன் நீண்டதுார ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
12 முதல் 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 8 கிலோ மீட்டர் போட்டியில், தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார். இவருக்கு பதக்கம் மற்றும் ரூ.2,000த்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர் பாரத்தை, ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, செயலாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், பயிற்சி அளித்த பால்கன் பவுண்டேசன் செயலாளர் நிகில் சிற்றரசு மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.